Saturday 28 April 2012

சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence) பெறுவது எப்ப‍டி?


படித்தவர்கள் (உங்களோடு சேர்த்து)13
டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டார ப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமா ன தகவல்களையும் கூறி னார். அவற்றின் தொகுப்பு …
இங்கே வழங்கப்பட்ட ஓட் டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றா ல் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக் கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட் ட வேண்டிய அவசியம் ஏற் படலாம். அந்த நாட்டில் டிரை விங் லைசென் ஸுக்கு விண் ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடி யாத சூழ்நிலையில், இங்கே இருந் து செல்லும்போதே இன்டர் நேஷனல் டிரைவிங் லைசெ ன்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த த்தின்படி, அந்த டிரை விங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத் துக்குச் செல்லுபடி யாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண் ணப்பிக்க முடியும். அதற்கு ரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர் த்தி செய்து, அதனுடன் டிரை விங் லைசென்ஸ், பாஸ்போ ர்ட், விண்ணப்பதாரர் எந்த நா ட்டுக்குச் செல்கிறாரோ அதற் குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள் ஆகியவற்றை இணை த்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டு ம். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப் பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவத ற்கான லைசென்ஸ் வைத்திரு ந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண் டால், அவருக்கு இரண்டு வகை யான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா ? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகு நர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப் படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ண ப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண் ணப்பிக்க வே ண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் கா ரை ஓட்டிக் காட்ட, அவர் திரு ப்தி அடைந்தால், இரண்டு சக் கரம், நான்கு சக்கரம் என இர ண்டு வகை வாகனங்களை யும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள் ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்ன வழிமுறை பின்பற்ற வேண் டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட் டுவதற்கு உரிமம் பெற விண் ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்க ப்படும். அதன் பிறகு, அத னை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய் து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ண ப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாக னமோ (பைக்) காரோ வாங்கு ம்போது 15 ஆண்டுகளுக்கு செ லுத்த வேண்டிய சாலை வரி யை ஒரே தடவை யில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூ லித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரி யாக வசூலிப்பது நடைமு றையில் உள்ளது. வாகன உரிமையாளர் களுக்கும், அர சாங்கத்துக்கும் இது செளக ரியம்தானே? போக்குவர த்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற் றும் ஐந்தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலு த்த முடியும். (இன்னொரு வி ஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்க ளுக்காக செலுத்தப் படும் சாலை வரியைத் தவி ர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சே வைக் கட்டணம் என்று இன் னும் சில செலவுகள் அடக் கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவ ர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந் திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறு படியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன் னொரு மாநிலத்துக்கு எடுத் துக் கொண்டு செல்லும்போ து, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும் பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அத ற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருட ங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு. உதாரணமாக வாகனம் வாங் கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலத்து க்கு வாகனத்தை எடுத்துக் கொண் டு சென்று மீண்டும் பதிவுசெய்தா ல், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃ பண்டு வாங்கிக் கொள்ள முடி யும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பா ட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கி றது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை க்கு எந்த அளவுக்கு பங்கு இருக் கிறது என்பதையும், நான் சொ ல்லித் தெரிந்துகொள்ள வேண் டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கட மையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அத னால்தான், அரசாங் கம் வாக னங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிக மாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாள ர்கள் அனைவரும் தங்களுடை ய வாகனங்களை மாசுக் கட் டுப்பாட்டு பரிசோதனைக்குட்ப டுத்தி, சான்றிதழ் பெற்று அதை யும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண் டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத் தால் அங்கீகரிக்கப் பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரி சேதனை மையங்களில் மட்டு மே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித் திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண் டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் களுக்கான ஆயுட் காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டு ப்பாடு சான்றி தழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப் படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தி ல் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மா சுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செ ய்து, சான்றி தழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனை யின்போது, அதிகாரியிடம் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்ட வில்லையென்றால், வாகன த்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலி க்கப்படும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Sunday 15 April 2012

தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்


தோட்டம் வடிவமைப்பது ஒரு கலை தான். பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் தோட்டம் உருவாக்குவது எப்படி என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
நிலம் வாங்கியாச்சு, நல்லநீர் இருக்கிறது ஒரு தோட்டம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நம்மவர்களுக்கு தோட்டம் எப்படி வடிவமைக்கலாம் என்று உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Start Creating Plan என்பதை சொடுக்கி எளிதாக தோட்டம் உருவாக்க ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையின் இடது பக்கத்தில் மரங்கள், பூச்செடிகள் என தோட்டம் வைக்கத் தேவைப்படும் அனைத்தும் இருக்கும் இதில் நமக்கு எந்த இடத்தில் என்ன செடி வைக்கலாம் என்று பார்த்து வைக்கலாம்.
ஒவ்வொன்றின் நீள அகலங்களையும் நம் விருப்படி மாற்றி அமைக்கலாம், எல்லாம் வடிவமைத்து முடித்த பின் அப்படியே அதை பிரிண்ட் செய்து வைத்துக்கொண்டு எளிதாக தோட்டம் உருவாக்கலாம்.
புதுமை விரும்பிகளுக்கும் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் எப்படி தோட்டமாக மாற்றலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு


உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி
உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.
அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

ரெகுவா புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்



1. மிக எளிதான இன்டர்பேஸ் வழியாக 'Scan' என்பதை கிளிக் செய்து, பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கோப்பின் பெயர் மற்றும் வகை அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய கோப்புகளை வரையறை செய்திடலாம்.
3. List மற்றும் Tree வகையில் கோப்புகளைக் காணும் வசதி.
4. யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
5. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், இமேஜஸ், வீடியோ, மியூசிக், மின்னஞ்சல் என எந்த வகை கோப்புகளையும் மீட்டுத் தரும்.
6. FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை கோப்புகளையும் மீட்டுத் தருகிறது.
7. கணணியில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்கிறது.
8. ஸிப் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மற்றும் யு.எஸ்.பி. ஹார்ட் ட்ரைவ்களில் இருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத் தருகிறது.
9. வேகமான இயக்கம், சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.
புதிய பதிப்பில்:
1. JPEG மற்றும் PNG புதிய தொழில்நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
2. விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
3. கீ போர்ட் நேவிகேஷனில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
4. பெரிய அளவிலான ட்ரைவ்களுக்கு, கூடுதல் மெமரி பயன்பாடு தரப்பட்டுள்ளது.
5. சிறிய குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.

பென்ட்ரைவை பாதுகாக்க மென்பொருட்கள்


1. USB WRITE PROTECTOR :
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது
 
 
2. USB FIREWALL :
 
USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது.இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும் வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது.இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.
 
 
3. PANDA USB VACCINATION TOOL :
 
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது.
 
 
4. USB GUARDIAN :
 
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.
 
 
 

பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு

நாம் பயன்படுத்தும் USB பென்டிரைவ்களின் தகவல்களை பாதுகாக்கவும், பென்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவிபுரிகிறது.

நல்ல நிறுவனத்தின் பென்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன், ஆனால் சில நேரங்களில் இந்த பென்டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது.

இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.

நம் கணணியில் பென்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து பென்டிரைவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பென்டிரைவை வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.
 
 
 
 
 
 

யு‌எஸ்‌பி பென்ட்ரைவில் விண்டோஸ் 7 ஐ நிறுவுவது எப்படி ?

இவ்வாறு நிறுவுவதற்க்கு 4 ஜி‌பி பென்ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7 டி‌வி‌டி தேவை .
முதலில்
1. யு‌எஸ்‌பி போர்ட்டில் யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை செருகவும்
2. USB Flash Drive யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை NTFS ஆக Format செய்யவும்
3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
4. பின் dvd Drive மற்றும் பென்ட்ரைவ் களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு ‘D’ யும் Flash Drive க்கு ‘H’ எனவும் கொடுத்துள்ளேன்
5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on
Command Prompt and select Run as administrator.
6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்
D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்
அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Pendrive letter யினை தரவும்
8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்
9. இனி உங்கள் pendrive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..
இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..
Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்.
 

யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு


உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.

வைரஸ் தாக்கிய பென்டிரைவை போர்மட் செய்வதற்கு



1. உங்கள் MyComputer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும்.
2. பின்னர் அதில் உள்ள உங்கள் பென்டிரைவ் Iconல் Right click செய்து Change Drive Letter And Paths கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள Drive Letterல் உள்ள எழுத்தை வேறு எழுத்தாக மாற்றி Ok கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் Drive Letter மாற்றப்பட்டிருப்பதை அறிவீர்கள். பின்னர் அதில் Right Click செய்து Format என்பதை கொடுக்கவும். பின்னர் Format ஆக ஆரம்பிக்கும்.

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு



முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு


நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.
இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.
முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run�> சென்று அங்கே �cmd� என டைப் செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.
மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).
இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்

நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு



உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.
Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.
Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.
Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.

ஒரு எண் பெருக்கல்


நீங்கள், 5 264 பெருக்கத்தை வேண்டும் .. 

குறிப்பு: நாங்கள் "10 / 2" => 2640 / 2 = 1320 உடன் "5" மதிப்பை மாற்ற வேண்டும்
மேலும் உதாரணங்கள்: -
563256 x 5 = 563256x (10 / 2) = 5632560 / 2 = 2816280 (இறுதி பதில்) 
செயல்முறை 5 எந்த பெரிய எண்கள் பெருக்கி அதே உள்ளது.

அட்டவணை 9 ட்ரிக்

எண்கள் எழுதவும்
இடது புறம் கீழே 0-9:

0 
1 
2 
3 
4 
5 
6 
7 
8 
9 

  பின்னர், வலது பக்க உ.பி., எண்கள் 0-9 எழுதும் செயலில் செய்ய:



09 
18 
27 
36 
45 
54 
63 
72 
81 
90 

  9 அட்டவணை:


9 x 1 = 09
9 x 2 = 18
9 x 3 = 27
9 x 4 = 36
9 x 5 = 45
9 x 6 = 54
9 x 7 = 63 
9 x 8 = 72
9 x 9 = 81
9 x 10 = 90

அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க


இதோ அதற்கான வழிமுறைகள்:

1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள். இதற்கு Start>Run>(type) "cmd".

2. பின்னர் கோப்பு(folder) சேமிக்க வேண்டிய இடத்தினை(C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் "mdaux" என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.(கோப்புக்களை உருவாக்க நீங்கள்(aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களை மட்டுமே பாவிக்க முடியும்).

3. தற்பொழுது aux என்ற கோப்பானது உங்கள் கணனியில் நீங்கள் தெரிவு செய்த இடத்தில்(directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்
5. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rdaux என்றவாறு தட்டச்சு செய்து அழிக்கலாம்.

வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு


கணணியில் ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும்.
ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான போர்மட்டுகள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட போர்மட்டில் மாற்ற மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

1. Freemake Video Converter: மற்ற எந்த இலவச வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்களும் செய்யாத பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது.

இந்த மென்பொருள் செய்யும் அற்புதமான பணிகள்:

1. 200 க்கு மேற்பட்ட வீடியோ வகைகளை ஆதரிக்கிறது. AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS, etc ஒளிப்படங்கள், ஓடியோ கோப்புகள் இவற்றை வைத்தும் வீடியோவாக மாற்றம் செய்ய உதவுகிறது.

2. ஓன்லைன் வீடியோக்களை நேரடியாக மாற்றம் செய்யலாம். இதில் வீடியோ முகவரியை உள்ளிட்டால் போதும்.

3. AVI, WMV, MP4, MPEG, MKV, FLV, SWF, 3gp போன்ற வகைகளிலும் பிளாஷ் வீடியோ கோப்பாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

4. ஆப்பிள், சோனி, ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளுக்கு ஏற்ப வீடியோக்களைத் தரப்படுத்திக் கொள்ளலாம். (Optimize for sony, apple, android)

5. CUDA மற்றும் DXVA என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை விரைவாக மாற்றம் செய்யும் திறனுடையது.

6.வீடியோக்களை புளுரே(Blue ray) வாக மாற்றலாம்.

7.வீடியோக்களில் Subtitles சேர்க்கலாம்.

8.ஒளிப்படங்கள், பாடல்களை நேரடியாக யூடியுபில் ஏற்றலாம்.

9.ஒளிப்படங்கள் மற்றும் ஓடியோவை வைத்து ஸ்லைட் ஷோ உருவாக்கலாம்.

10. வீடியோக்களை வெட்டலாம், இணைக்கலாம். Rotate செய்யலாம், Aspect Ratio வை மாற்றலாம்.

இவ்வளவு வேலைகளையும் ஒரே மென்பொருளில் எளிமையாகவும் விரைவாகவும் செய்யலாம்.
தரவிறக்க சுட்டி

கோப்புகளை டெலிட் செய்யும் முன் அனுமதி பெறுவதற்கு


நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கும் போது தவறுதலாக நமக்கு தேவையான கோப்புக்களையும் அழிக்க நேரிடலாம்.
இதனால் நாம் ஒவ்வொரு முறையும் டெலிட் செய்யும் போது நம்மிடம் அனுமதி பெற்று டெலிட் செய்தால் நன்றாக இருக்கும். வழக்கமாக இந்த செட்டிங் கணணியில் இருக்கும்.

தவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் கோப்புகளை டெலிட் செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே கோப்புகள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும்.

இதனை தவிர்க்க ஒவ்வொரு முறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவது போல் செட் செய்யலாம். அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள்.

பின்னர் ஏதாவது ஒரு கோப்பை டெலிட் செய்யும் போது உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே டெலிட் செய்யப்படும்.

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு



கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப்படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.
சுருக்கப்பட்ட  கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது.
அடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ்புக் தளத்தில் நம் நண்பர்கள் டவுண்லோட் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள விண்ஸிப் புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.

கணணியில் திறக்க இயலாத கோப்புகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு


பலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலும் சில வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது என்ற சந்தேகம் வரலாம்.
காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம். இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம் மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது.
பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள்(File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நம் கணணியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர்.
உதாரணமாக ஒரு வீடியோ கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மென்பொருட்களுக்கான Keygen களை இலகுவாக பெறவேண்டுமா



இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.
சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது
1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் – Google.com
2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்

கோப்புகளின் வகைகள்



.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் கோப்பைக் குறிக்கிறது. இந்த வகை கோப்பை போர்மட்டிங் விஷயங்கள் இருக்காது, எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் போர்மட் என அழைக்கப்படும் இந்த வகை கோப்புகளில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் போர்மட்டிங் இருக்கும். போர்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து கோப்பைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் கோப்புகள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் கோப்புகளுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
.pdf: இந்த வகை கோப்பை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர்.
கோப்பு உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் கோப்பை அப்படியே படம் போல் கோப்பாக இது காட்டும். தற்போது இந்த வகை கோப்புகளை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை கோப்புகளைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.htm / html: ஒரு கோப்பு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம்.
எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த கோப்பைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கணணியில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு கோப்பாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த கோப்புக்கு கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம் அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
சுருக்கப்பட்ட கோப்புகள்: கீழே கோப்புகளை சுருக்கித் தருகையில் கிடைக்கும் கோப்பு வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு கோப்புகளை சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். கோப்புகளின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு கோப்பு உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட கோப்பு என்று பொருள். இத்தகைய கோப்புகளை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
.rar: இதுவும் சுருக்கப்பட்ட கோப்பின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.
.cab: உங்கள் கணணியில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக்காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் கோப்பு ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை கோப்பின் துணைப் பெயர் தான் இது. இந்த கோப்பை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

Saturday 14 April 2012

பாஸ்போர்ட் அப்பளை செய்வது எப்படி ?




இன்றைய காலத்தில் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு இன்றியமையாத பொருளாகவிட்டது. படிப்பதற்கு செல்வதற்குக் கூட பாஸ்போர்ட் அவசியம . மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புசுற்றுலா செல்வதற்கும் பாஸ்போர்ட் மிக மிக அவசியம். 
படித்துகொண்டிருக்கும் போதே பாஸ்போர்ட் அப்ளை செய்துகொண்டால் மிக மிக நல்லது.
பின்னாளில் அலைச்சல் குறையும்.புதிய பாஸ்போர்ட் அல்லது ரினிவல் பண்ணப் போகிறவர்களுக்கு எனக்குதெரிந்த சில  விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அவர்கள் அடிக்கடி பாஸ்போர்ட் அலுவலகம் செல்லவேண்டியதில்லை என்ற நல்ல நோக்கத்தில்எழுதுகிறேன்.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து விடுங்கள் அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Continue என்பதை கிளிக் செய்தவுடன்
Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி கொள்ளவும்.
District: உங்களது மாவட்டதை தேர்வு செய்து கொள்ளவும்.
Service Desired: எந்த விதமான பாஸ்போர்ட் புதிய பாஸ்போர்ட்டா அல்லது ரினிவலா என்பதை தெரிவு செய்துகொள்ளவும்.
Surname: உங்களது இன்சியல் (பொதுவாக அப்பாவோட பேரு அல்லது கல்யாணாம் ஆன பெண்ணாக இருந்தால் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.
Previous Name: உங்களது முன்பு இருந்த பெயரை எழுதிக்கொள்ளவும்.
Sex: ஆணாபெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருஷம்  (DD MM YYYY) குறிப்பிடவும்.
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் பெயரையும்
வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டின் பெயரையும் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: உங்களது தொழில்
Visible Mark: உங்கள் உடம்பில் தெரியும் ஏதாவது அடையாளம் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய குடியிருப்பு முகவரி
Permanent Address: நிரந்தரமான குடியிருப்பு முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய குடியிருப்பு முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும்.
Phone No: வீட்டு தொலைபேசி எண்
Mobile No : கைத்தொலைபேசி எண்
Email Address: இமெயில் முகவரி 
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: வாப்பா (தகப்பனார்) பெயர்
Mother's Name: உம்மா (தாயார்) பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருஷமாக வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் 
From: To: Address 1 : என்னும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்பப்பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
 DD No, DD Date, Bank Name தகவலை பூர்த்தி செய்துகொள்ளவும்.
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட்(கடவுசீட்டு) இருந்து வருடம் முடிந்துபுதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் வழங்கிய தேதி
Place of Issue: பழைய பாஸ்போர்ட் வழங்கப்பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (பழைய பாஸ்போர்ட் கடைசி பக்கத்தில் பார்த்து பூர்த்தி செய்துகொள்ளலாம்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் இறுதி(முடிவு) நாள்
சிகப்பு கலரில்லதை கண்டிப்பாக எழுதவும்.
மெரூன் கலரில்லதை தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்.
அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை பார்த்து  அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்துவிட்டோம் என்று உறுதி செய்துகொண்டு"Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்தபாஸ்போர்ட் ஆபிஸிக்கு அடுத்து செல்லவேண்டிய  (availability date and time) நேரம் தேதியை காட்டும்,நாம் அதில் நமக்கு தேவையான நாளை,நேரத்தை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் SAVE செய்து,மறக்காமல் பிரிண்ட் எடுத்து கொள்ளவும்போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம்செய்யதுவிட வேண்டாம்.
முகவரி சான்றிதழ் (ஏதாவது இரண்டு) :
    * ரேசன் கார்டு
    * குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * வாக்காளர் அடையாள அட்டை
    * வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
    * துணைவியின் (மனைவின்) பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதழ் (ஏதாவது ஒன்று)_:
    * 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
    * பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
    * கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு  சான்றிதழ்கள் :
    * 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது,அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
    * உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
    * பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்துபழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் (நகல்)ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டுஅன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது.நாள்மட்டும்தான் உண்மைமுன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும்ஆதலால் மறக்காமல் நன்றாய் சாப்பிட்டுவிட்டு செல்லவும்.
மேலும்  கூடிய விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.