கூரியர்
சர்வீஸ் வந்து பெருவெற்றி பெற்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு
நாட்டின் அரசு நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளிவிட்ட்து.தபால் துறையை விட
மக்கள் அதிகமாக இவற்றை நாடினார்கள்.குறைந்த பணியாட்களை வைத்துக்கொண்டு நாம்
எதிர்பார்க்கிற மாதிரி சேவையை வழங்கியது.இப்படி கூரியர் சர்வீஸ் நட்த்தும்
சிலரை எனக்குத் தெரியும்.
நண்பர் ஒருவர் உறவினருக்கு புதிய சட்டை ஒன்றை அனுப்பினார்.விலை உயர்ந்த
பிரபல கம்பெனியின் சட்டை அது.ரகசியமாக இருக்கட்டும் என்று அவருக்கு
சொல்லவில்லை.பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் உள்ளேயே வைத்து
விட்டார்.அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.பொறுக்காமல் போன் செய்து
விசாரிக்க அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
கூரியர் சர்வீஸில் போய் விசாரித்தால் தொடர்புள்ள கிளையை
விசாரித்திருக்கிறார்கள்.டெலிவரி செய்யும் பையன் இரண்டு நாள்
போய்விட்டேன்.வீடு பூட்டியிருந்த்து.அங்கேயே ஒரு கடையில் வைத்திருக்கிறேன்
என்று பதில் வந்திருக்கிறது.ஒரு வழியாக சட்டை போய் சேர்ந்துவிட்ட்து.ஆனால்
அழுக்காக! தெரியாத விஷயம்: பையன் நான்கு நாட்கள் போட்டுக்கொண்டு
சுற்றிவிட்டு பிறகு பொட்டலம் கட்டி கொண்டு போய் கொடுத்திருக்கிறார்.
இன்னொருவர்
பத்து பனியன் அனுப்பினார்.போய் சேர்ந்த்து எட்டுதான்.டெலிவரி செய்பவர்கள்
உள்ளே என்ன இருக்கிறது என்று சிலவற்றை பிரித்து பார்ப்பது அவர்களுடைய
ஆர்வம்.பயனுள்ள சில காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.என்னுடைய சில கடிதங்கள்
முகவரி மாறிப்போய் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.
கூரியர் மூலம் தபாலோ,பொருளோ அனுப்பிவிட்டால் ஒருநாள் கழித்து போய் சேர்ந்து
விட்ட்தா என்பதை உறுதி செய்வது எனக்கு பழக்கமாகிவிட்ட்து.யார் கையெழுத்து
போட்டிருக்கிறார்கள்,என்பதையும் சரி பார்ப்பேன்.போன் மூலமும் உறுதி
செய்வதுண்டு.அலுவலகம் என்றால் யாரிடமாவது கொடுத்துவிட்டு
போய்விடுவார்கள்.மற்றவர்கள் பிரிப்பதும் நடக்கும்.எதுவும் தெரியாத மாதிரி
மீண்டும் ஒட்டி கொடுத்துவிடுவார்கள்.
ஒரு நாள் வாசலில் ஒரு பெட்டி கிடந்த்து.எடுத்துப் பார்த்தால் உறவினர்
அனுப்பிய பார்சல்.எங்களிடம் கையெழுத்து வாங்கவில்லை.உறவினரை அவரை அனுப்பிய
கிளையில் விசாரிக்கச் சொன்னால் என் பெயரை கையெழுத்தாக அவர்களே போட்டு
பி.ஓ.டி நகலை அனுப்பிவிட்டார்கள்.போன் நம்பர் குறித்திருந்தாலும் போன்
செய்யவில்லை.
சில
கூரியர் சர்வீஸ்களில் போனால் கிளை இல்லாத இடங்களுக்கும் வாங்கிக்
கொள்வார்கள்.ஆனால் வேறு நிறுவனம் மூலம் அனுப்புவார்கள்.தபால்கள் இதனாலும்
தாமதமாகும்.சரியாக கடிதங்களை சேர்க்க முடியாமல் வழக்கை சந்தித்த
நிறுவன்ங்களும் உண்டு.நஷ்ட ஈடு வழங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.
அரசு அதிகாரிகளுக்கு,நிறுவன்ங்களுக்கு தபால்துறை மூலம் அனுப்பவதே
சரியானது.அதிகாரிகளிடம் கூரியர் சர்வீஸை சேர்ந்தவர்கள் நேரடியாக தர உள்ளே
விடமாட்டார்கள்.வேலைக்கான விண்ணப்பங்களை பல ஆணையங்கள் கூரியர் சர்வீஸ்
ஆட்களிடம் நேரடியாக வாங்குவதில்லை.பெட்டியில் போட்டுவிட்டு போகச்
சொல்வார்கள்.
பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில்
நாம் உறுதி செய்யவேண்டும்.பொருளை உரியவரிடம் சேர்க்கப்பட்டு விட்ட்தா
என்பதை கிளையில் அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.உறவினர்களாக இருந்தால் போன்
மூலமும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment