Friday 30 March 2012

பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி


பிளாக்கர் வலைப்பூக்களை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிளாக்கர் தளங்கள் வாசகர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் (CCTLD) டொமைனுக்கு தானாகவே Redirect ஆகியது. இதனால் பெரும்பாலான வலைபூக்கள் சில பிரச்சினைகளை சந்தித்தது. அதில் அலெக்சா ரேங்க், கூகுள் பேஜ் ரேங்க், திரட்டிகள் பிரச்சினை போன்றவை முக்கியமானது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சுலபமான தீர்வு கிடைத்து விட்டது. இனி உங்களுடைய பிளாக் ccTLD டொமைன்களுக்கு redirect ஆகாமல் எந்த நாட்டில் இருந்து ஓபன் செய்தாலும் பழைய blogspot.com வரவைப்பது எப்படி  என பார்ப்போம்.
இதற்க்காக உங்கள் டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து Design ==> Add a Gadget சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி இதில் பேஸ்ட் செய்யவும். 
இப்பொழுது Save கொடுத்து விட்ஜெட்டை சேமித்து விடவும். இப்பொழுது உங்களின் பிளாக்கை ஓபன் செய்து பாருங்கள். பழைய blogspot.com முகவரியுடன் உங்கள் பிளாக் ஓபன் ஆவதை காணலாம்.

இனி அலெக்சா ரேங்க், திரட்டிகள் என எந்த பிரச்சினையும் இல்லாமல் முன்பு போல் உங்கள் பிளாக்கை ஓபன் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment