Friday 30 March 2012

PDF பைல்களை சுலபமாக உருவாக்க - PDF Creator




நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய தகவல்களையும் யாரும் மாற்றம் செய்யாமல் வெறும் படிக்க மட்டும் முடியும் வைகையில்  இருக்க நாம் அந்த விவரங்களை PDF பைல்களாக உருவாக்குவது என்று காணுவோம். இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • அதில் உள்ள Document என்பதை க்ளிக் செய்து Add என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் தகவல்கள் வைத்திருக்கும் வேர்ட் அல்லது எக்செல் பைல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • OK கொடுத்தவுடன் நீங்கள் தேர்வு செய்த பைல் அந்தந்த மென்பொருளில் ஓபன் ஆகும். அதை நீங்கள் க்ளோஸ் செய்து விடுங்கள்.
  • உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் PDF பைலின், உருவாக்கிய நேரம் போன்ற சில தவல்கள் இருக்கும். அதில் உங்களுக்கு வேண்டுமென்றால் மாற்றம் செய்யலாம் வேண்டாமென்றால் என்றால் கீழே உள்ள SAVE பட்டனை க்ளிக் செய்யவும்.
  • Save பட்டனை அழுத்துவதற்கு முன் அங்கு உள்ள Options பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையென்றால் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
  • அனைத்து மாற்றங்களும் செய்த பின்னர் Save என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் PDF பைலை சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் பைல் PDF ஆக மாறும்.
  • மேலே உள்ளதை போல விண்டோ வந்து மறைந்தவுடன் உங்கள் PDF பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டிருக்கும்.

No comments:

Post a Comment