ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
ஸ்ரீ ஸுக்தம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkEbr5sqHCLJIh9RnejSlN0e8O9uB1cjtRqyfyMG0VVa3PaZZTtgMC2ZJkO8FQhxbRxWPB1svSqE2zT65A5YSVRr7o66XP3CypexRnJverF83Nnhxfq-3ee6o6O7rlkE0q05iK7vdDjB8/s200/tirupati_balaji_001.jpg)
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
விஷ்ணு
பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த
லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக
விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச்
சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVjpTUZyrw19sGWT3BiL3RKAbNJPbkQSR7gX9cvBQVKvIIJcCIQqrQh8vICR4g4fIi7aoe8QWtowrb9TNSCqtgeanGDR_bLd2-RsefFoKXieIlDacVSOyViri7g-9gIuQe9dXoRGNuigLS/s1600/Venkedeshwaraswami.jpg)
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே
திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகத்தில் இருக்கும் பாசுரம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNDoEmglW3ECErBQ7sISgFAhvoGjpxR4bJl1DVEct9JaApTsgJQqKETLbOKPMa-5469SMLHIV3hgxma4u-ICnRIU4pxU6NaMt6erOdDoHsaguFx86u7eN8eTSzJ1ZIwAsFKdmxyY1mNLE/s1600/943LakshmiVishnu.jpg)
வடமொழி வேதங்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் பெருமாளைஅறிய முயற்சி செய்து மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால இறைவனின் முழுப் பெருமையும் பாட முடியாமல் வேதங்கள் பின்வாங்கிவிட்டனவாம்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMGyAEPalfRXQUwkbcbrKhKPmFNobDrJ7JbOxLDojSQipUzWis8uEUxjZSNdIDUHkOFOYDvutJNJcLk2yCO0OGmNjz7POLrYJdhhRu6z742Yks-FPR-7BM_KnlgSJyZef7QbovMu7gdNM/s200/Tirupathi+balaji+venkatachalapathy+c.jpg)
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அருளாளர்கள்.
அதனால் பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjed5PWTmbGOZL9zVXA4IiSTzSHBAnHFIX-c85AzjkagkEiTcEZXL6RiiR4udSYfZQJHOh8uhjmlO2ib3-9ToBydJf-563v7HyE2Sk_eFFQ-cvpUqO3P-ZnkLMrwqhVHPtbomfnCe9jm8o/s200/Tirupathi+balaji+venkatachalapathy+cx.jpg)
அவர்களின் இனிமையான தமிழ்ப் பாடல்களை கேட்டு இன்புற பெருமாள் பிரபந்தம் பாடுபவர்களைத் தொட்ர்கிறார்..
பெருமாளை இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத வேதங்களை ஓதுகிறவர்கள் பெருமாளைத் தொடர்கிறார்கள்..
வடமொழி வேதங்களை விட ஆழ்வார் அருளிச்செயல் என்று சிறப்பு பெற்ற தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட.
அறிவால் அளக்கமுடியாத ஆண்டவன் எளிய அருமையான அன்பான பக்திக்கு கட்டுப்பட்டு பின்தொடர்வது சிலிர்க்கவைக்கும்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFYcCM3-Na0saBLhrtOVq_hLdCeTrwtCvfTwsC4muS4bDBdqSfNPftw2Q6Mm_gNQMNHbp9Nyq_-TtpJHj6tbibA4jmNdC08iOX1wHdCExTDPount21bKg_Y8YZWPmsD1OYD2RHhOLQ8V8/s640/God-Vishnu-And-Goddess-Laxmi.jpg)
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
வேதத்தை, அதன் சாரம் மாறாமல்,மாறன் நம்மாழ்வான், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார் சித்தர் கருவூரார்!
CURRENCY ALANKARAM to LORD VENKATACHALAPATHY, SALEM.!!! GOVIDA, GOVINDA!!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCDTEPuq-StEzh8aN17hRUUnuwwlsX6P3MyAzcUoL_5cko5rIx-dRK1E4v13z6BJl7gCksx9AzKNxg3A3KzybtbZhp6l1vPt7_vg6uJ2J0VDHC69rpFpVJbBcdhRZvMIQJYRlgGpRT_Bg/s200/venkatesa+currency.jpg)
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே..
அற்றது பற்றெனில் உற்றது வீடு, உயிர் அற்றிறை பற்றே!!!
ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதுதான் தமிழ் வேதம்!
![[6 x 8 two prints.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYOLR4J8Oy5oetuMaHrNioM6sPmG-JbkHd9_c6JPnAf5mfzJ0G7FmbwbElP_S9JkMTqoAx7ecCIY9AMhUYTGiMZFa6oMOjgOrMOiRFZF_66rLzkr9UFgaETbPl32v_6RHLCNXv8eXk0BU/s640/6+x+8+two+prints.jpg)
ஏழுமலையானுக்கு
தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு
எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத்
தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத்
தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில்
மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது
மிகப்பெரிய பாக்கியமாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKex4aWwVtcdwvMsvTWa7YY0lr43d3tyhCmE3Y18fWnniLGypFC1iSXN8A5-G-7_j5Wfnvl0otVl6zLCpUt4o9rRXK1WaLSVRiZBy2S4CtlFdx9Fe8RseSSLkdaLdUlm6FQqC4tLefFsE/s400/ThirumalaGoldCrown.jpg)
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்பது ஐதீகம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio_w8qzApVysFaOYs2j8y9-aIwZO8wcUxOWWXoveJ7a_-kCorKP-gHxru3V18_gqZS_AnLozCsc0HsRv4XboobDEX6e2pYDPmPXetre4GazWllL_-PZM6Ytu-wSyf6PPlC3ZC8-uuQWfY/s640/Thirupathi19.jpg)
திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கி இறையருள் நாடியவள்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg34FhpkJs605GADZfZNv51uwepi9qMhXM9pL55njNuIiNHOODqKHty2doPMrTMyfoUVetlGdCy0lkS5BfRr89yVTsDxVNUP9rcH8JOIgoJv5Kfy4NSoRzM4hPbckfWlRfjVWaQ6rP6dNk/s640/Thirupathi20.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Pbt6fPQdL9-0ECUKX82OupfGpvekfQ3axhQZh8iuOi81ibBIBqq8K_Jq7YccGeZi71HBbsozXtaz9HzSB-TeOzaa3N-fg7KDETKItr1ej5PZ_90zNiXYIuCJ7WBaBpZKpdm2EPsZYn0B/s400/DSC02028.jpg)
பீடுடைய - பெருமையுடைய மாதமான மார்கழியில்
பக்தியினால் தூய்மையாக்கி மேன்மை பெறுவோம்.
மாஸானாம் மார்க்கசீர்ஷ: - பகவத் கீதைஸ்ரீகிருஷ்ணர் மார்கழி மாதத்தின் சிறப்பைச் சொல்வதற்காக மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
பாரம்பரியமான இந்திய காலக் கணக்கீட்டில், சூரியனின் பயணப் பாதையை ஒட்டி, உத்தராயணம் - தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உண்டு...
வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பயணத்தைக் குறிக்க இவ்வாறு பிரிவுகள்...
தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி.
உத்தராயண புண்ய காலம் தை மாதம் முதல் தொடங்குகிறது.
உத்தராயணம் என்பது தேவர்களுக்கு பகல், தட்சிணாயணம் இரவு ..
. அவ்வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்.
எனவேதான், அந்த மாதத்தில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆலய நடைமுறைகள் துவங்குகின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQmPWf_WqD_lwTWt-2c6AUzK3AAASIogiEOY80Eg_uimQSKbMDZZCHSuNgEXoX6osBwrWNGzkm6VG-r_wMDzrcA2pE0M0K3tL8vrRvQ9Pov5sxlp73n-b8WugSCQTeQ8Vx9IDeEOTVquw/s640/andal-full.gif)
இருண்டு
கிடக்கும் வாழ்க்கையில் விடியலைக் காண, விடியல் நேரமான மார்கழியில்
இறைவனைத் துதித்து நோன்பினை கைக்கொள்ளும் பழக்கத்தை முன்னோர் ஏற்படுத்தி
வைத்தனர். கண்ணனும் அதைத்தானே சொன்னான். "பக்தா உன் வாழ்க்கை விடியல் என்னில் துவங்குகிறது' என்று!
அதனால்தான்
ஆண்டாள் மார்கழி நோன்புக்கு கண்ணனையே உபாயமாகப் பிடித்தாள். மார்கழி
நோன்பு வேறு, கண்ணனுக்கான நோன்பு வேறா என்ன? கண்ணனை அடைவதற்காகவே பாவை
நோன்பைக் கைக்கொண்டாள் ஆண்டாள்.
"வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்' என்று கொண்டாடப்படுகிறது ஆண்டாள் அருளிய திருப்பாவை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBmwsIOVRwhp7auZrQsiwAZWlLPPmS_NM9Lxu3dfCxFd88821a7TXEzlp_rqsOD4-LpuBWnG5myKDRfIHF-6-bUFwnLH8SmkcUcZTjIT0djJouUzqhrI9e69YvqvZAfH3b1VHLHR8JsdI/s640/LAKSHMI+CALIFORNIA+2011.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrwjZKLlCOysECtzSQFRIaNTqBlE3GN3wzXtX7f53BBGweMqhzQ8PzeH_NK8JDCMpjszs4AvjiLtVvkU2ibwaGEoyTkPqo-8DRHaKiQ_KvAWO1gNiyhCpeqpTyhJAMERM6U_NYDj1auZk/s1600/original_TTD_4d4d73b65b1b3.jpg)
திருப்பதி
ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்குப்பதிலாக
திருப்பாவை பாடல்கள் பாடப்படுவது வழக்கமாக உள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Vr7zDuY-iD28eKdduMbhN8zNVWZaWyJMJNCymmKzIt98jhQ_x6z7updVCWF-XEhK_LPxpasY2q5zxMLQsaehy53V72hX1-Wt56L6yrLWEMmEHgfh1-yvNlVPAJUDhcZ2XWQCNC3W0S2W/s400/namperumal%2520in%2520asathana%2520mandapam%2520in%2520ammamandapam.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihgwkFnMZi0MgPE8n1NcNikxd6p9Eid4qimvrpoZWod-UVx_CvYsAuEUJKkgFtlQybJnDauWGMSY-CYMennz5OIFoxTHD20cqrxYUgV0_nXbhoEig41AxLnynzp86kcVErDPH8glX6IDPU/s400/11.jpg)
Kind Regards,
RajaRajeshwari Jaghamani
http://jaghamani.blogspot.com/
No comments:
Post a Comment