இந்த
படத்தில் உள்ளது போன்ற சிரிப்பும் , மகிழ்ச்சியுமான வாழ்க்கை வாழ
வேண்டுமா ? அதற்கான வழிமுறைகளும் படத்திலேயே உள்ளதே ....அப்போ இந்த கட்டுரை
அர்த்தமற்ற ஒன்று என்கிறீர்களா ? இல்லை. தொடர்ந்து படிக்கவும். ஏதோ
ஒன்றாவது கிளிக் ஆகும்... கண்டிப்பாக. இதோ கட்டுரைக்குள் செல்வோம் !
உணவு , உடை , உறைவிடம் என்ற இந்த அடிப்படைத்
தேவைப் பட்டியலில் நாம் இன்று இன்னொரு தேவையையும்
சேர்க்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம். அதுதான்
'நல்ல ஆரோக்கியம்' . இந்த் மூன்றையும் ஓரளவு அல்லது
நன்றாகவேப் பெற்று விட்ட ஒரு மனிதன் இந்த ஆரோக்கிய விஷயத்தில்
அக்கறை காட்ட விட்டாலோ அல்லது நோய்த் தாக்குதலில் இருந்து
தப்பிக்க முடியாமல் போனாலோ அனைத்தும் இருந்தும்
அவன் ஒரு நடைபிணமாகவே மாறி விடுகிறான் .
முற்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல திட உடல், மனம்
கொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் . உண்மைதான்.
மறுக்கவில்லை. இயற்கையோடு இணைந்த ஒரு இனிதான வாழ்வு அது.
அதை நாம் இப்போது எண்ணிப் பயனில்லை. நம் பழம் பெருமையையும்
கட்டிகாத்து அவற்றிலிருந்து நல்லனவற்றை மட்டும் அன்னம் போல்
பிரித்தெடுத்து , இன்றைய நவீன வாழ்வின் சவால்களை, இடர்பாடுகளை
சாமார்த்தியமாக சமாளித்து இரண்டையும் சமநிலையில் கொண்டு சென்று
ஆரோக்கிய கொடி நாட்டுவதில் தான் நம் திறமை உள்ளது.
ஒரு வகையில் சொல்லப் போனால் அவர்களை விட நாம் தான்
அசகாயசூரர்கள். சிறு உதாரணத்திற்கு அக்காலத்தில் கணினி, எரிபொருள்
, மின்சாரம் போன்றவையும் இல்லை. மனஅழுத்தம் , சுற்றுசூழல்மாசு ,
விபத்துகளும் இல்லை. அதுவும் இல்லை.இதுவும் இல்லை.
சீர்கேடுவதர்க்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
தேவைப் பட்டியலில் நாம் இன்று இன்னொரு தேவையையும்
சேர்க்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம். அதுதான்
'நல்ல ஆரோக்கியம்' . இந்த் மூன்றையும் ஓரளவு அல்லது
நன்றாகவேப் பெற்று விட்ட ஒரு மனிதன் இந்த ஆரோக்கிய விஷயத்தில்
அக்கறை காட்ட விட்டாலோ அல்லது நோய்த் தாக்குதலில் இருந்து
தப்பிக்க முடியாமல் போனாலோ அனைத்தும் இருந்தும்
அவன் ஒரு நடைபிணமாகவே மாறி விடுகிறான் .
முற்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல திட உடல், மனம்
கொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் . உண்மைதான்.
மறுக்கவில்லை. இயற்கையோடு இணைந்த ஒரு இனிதான வாழ்வு அது.
அதை நாம் இப்போது எண்ணிப் பயனில்லை. நம் பழம் பெருமையையும்
கட்டிகாத்து அவற்றிலிருந்து நல்லனவற்றை மட்டும் அன்னம் போல்
பிரித்தெடுத்து , இன்றைய நவீன வாழ்வின் சவால்களை, இடர்பாடுகளை
சாமார்த்தியமாக சமாளித்து இரண்டையும் சமநிலையில் கொண்டு சென்று
ஆரோக்கிய கொடி நாட்டுவதில் தான் நம் திறமை உள்ளது.
ஒரு வகையில் சொல்லப் போனால் அவர்களை விட நாம் தான்
அசகாயசூரர்கள். சிறு உதாரணத்திற்கு அக்காலத்தில் கணினி, எரிபொருள்
, மின்சாரம் போன்றவையும் இல்லை. மனஅழுத்தம் , சுற்றுசூழல்மாசு ,
விபத்துகளும் இல்லை. அதுவும் இல்லை.இதுவும் இல்லை.
சீர்கேடுவதர்க்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
பக்கத்தில் 'பார் ' இருந்தும் பாராமல் போவது எவ்வளவு கஷ்டம் ?
விரல் சொடுக்கும் வலையின் விரச வலையில் விழாமல் போவதோ
இன்னொரு உலக சாதனை . ஒருபுறம் , நிறைய காய்கறிகள் , பழங்கள்
சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவை மரபணு மாற்றம் செய்யபடாத ,
நஞ்சு கலக்காத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாய் இருக்கணும்
இப்படி எத்தனையோ கட்டாயங்கள் நம்மைக் கட்டி தான் போடுகின்றன ஒரு எல்லைக்குள்.
இருந்தும் நாம் வாழ்க்கைப்போரைத் தொடர்ந்து கொண்டு தான் வருகிறோம்.
ஒட்ஸ், flaxseeds , spirulina , கோதுமைப்புல் , நோனி , chiaseeds என்று
நம் கணினி போலே
நாமும் நம்மை மேம்படுத்தியும் , புதுப்பித்தும் வருகிறோம்.
முன்பைவிட அதிக விழிப்புணர்வு பெற்று இருக்கிறோம்.
மூலிகைகளையும் , ஆர்கானிக் உணவு வகைகளையும்
சேர்க்க ஆரம்பித்து விட்டோம்.இருப்பினும் ,
காலங்கள் மாறி விஞ்ஜானம் வளர்ந்து மனிதனின் சராசரி ஆயுட்காலம் ,
உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல்
நூறாண்டுகளில் இருந்து சுருங்கி விட்டது.
அதுவும் ஒரு நன்மைக்குதான் என்றே கொள்வோம்.
இல்லை என்றால் 'வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் ..இந்த மண்ணில் இடம் ஏது ?'
என்ற தத்துவ பாடல்
பாட ஏதுவாகி விடும். அது மட்டும் இன்றி இந்த அவசர உலகில்
இப்போதெல்லாம்
அவஸ்தை இல்லா அவசர மரணம் வேண்டுவோரே அதிகம்.
முக்கியமாக ஸ்ட்ரெஸ் , இதய நோய் , புற்றுநோய் ,
சர்க்கரை நோய் , விபத்து இழப்புகள்
என்று பரபரவென கிளை விரிக்கும் அச்சுறுத்துதல்கள்
ஏராளம் , தாராளம் இன்றைய கால கட்டத்தில்.
இவற்றை எப்படி முளையிலேயே கிள்ளி எறிவது , வருமுன் காப்பது ,
வந்த பின் எவ்வாறு களைவது , அல்லது அதனுடனேயே மகிழ்ச்சியாக வாழ்வது போன்ற
கலைகளை இனிமேல் பார்ப்போம் ஒரு குறுந்தொடராக.. என்ன ,
' நீர் நிறைய பருகு
காய்கறிகள் , பழங்கள் சேர்
உடற்பயிற்சி செய்
எண்ணெய் , இனிப்பு தவிர் '
என்ற பழைய பல்லவி தானே , கேட்டு , கேட்டு காது புளித்து விட்டது என்கிறீர்களா ?
சற்று பொறுங்கள். நிதானம். நான் சொல்லப் போவது அவை மட்டும் அல்ல ,
எப்படி நாம் அதை நடை முறை வாழ்க்கையில் எளிதாக பின்பற்றலாம் என்பதும் தான் .
முக்கிய குறிப்பு :
இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது என்பது
அவரவர் சொந்த பொறுப்பிலே , அவரவர் விருப்பு வெறுப்பே !
இனி விளம்பர முன்னுரைகளுக்குப் பின் ப[பா]டம் ஆரம்பம்.
1 . முதலில் ஒரு சுலப [ குறுக்கு வழி ?] முறையைக் கை கொள்வோம்.
அப்போது தானே மற்றவற்றைப் படிப்பீர்கள் ? அதற்குத் தான் .
அது... நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக விளங்கக் கூடிய .....
ரத்த ஓட்டத்தை சீராக்கி ...... நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய ........
ஆரோக்கிய சாதனங்கள். ஆம் . massagers எனப்படும் சாதனங்கள்.
இவை , ஒரு நல்ல நடைபயிற்சி , ஜிம் வொர்க்-அவுட் , மலை ஏறுதல் , சுற்றுலா,
கடின உழைப்பு அல்லது ஒரு விளையாட்டு பயிற்சிக்குப் பிறகு வரும்
தசைப் பிடிப்புகள் , முடிச்சுகள் , ரத்தக்கட்டுகள் போன்றவற்றிற்கு மிகச் சிறந்தது.
உங்கள் பையனே ஒரு மார்ச்பாஸ்ட் , cycling , football என்று விளையாடிக் களைத்து
வரும் பொது இவை மிகுந்த பலன் அளிப்பவை. எனவே இதில் முதலில்
முதலீடு செய்வது நம் புத்திசாலித் தனம். அதிலும் இந்த டால்பின் massager
டாப் பலன்களைத் தர வல்லது. களிம்பு மற்றும் வலி நிவாரணிகளில் இருந்து
நமக்கு நிவாரணம் அளிக்கும் . ஒரு நல்லத் தரம் வாய்ந்தது என்றால் 500 - 700
ரூபாய்க்குள் வாங்கி விடலாம். ஒரு அரிய பரிசு பொருளாகவும் இதை மற்றவர்க்குத் தரலாம்.
பாராட்டுக்கள் நிச்சயம்.
இதைப் பயன்படுத்திய பின்னர் கூடுதல் பலன் பெற ,
நாம் ஒரு நல்ல சூடான வெந்நீர்க் குளியல் போடுங்கள் .. அதுவும் அதில்
எதாவது ஒரு ஆரோமடிக் ஆயில் , கலோன் போன்றவற்றை
இட்டுக் கலந்தால் உங்கள் அலுப்பெல்லாம் போயி போச்சு.
உடம்பும் மனசும் பிரெஷ் , பிரெஷ் ஆயாச்சு. இனி அடுத்த வார வேலைகளுக்கு உடலை ரிசார்ஜ் செய்து விட்டாயிற்று.
இந்த வகை massagers முதுகு வலிக்கும் , முழங்கால்,கை வலிக்கும் ஏற்றது.
back -pack
சுமந்து சுமந்து புண்ணான முதுகிற்குப் பொன்னானது.எனவே இதையும் வாங்கி
உங்கள் ஆரோக்கிய கிட் ஐ இப்போதே தயார் செய்ய ஆரம்பித்து விடுங்கள்.விலை
மலிவுதான் .
ஆரோக்கிய சாதனங்கள் !
சென்ற கட்டுரைப் பதிவில் massagers பற்றி பார்த்தோம் அல்லவா ?
அதன் தொடர்ச்சியாக நாம் வீட்டில் வைத்து இருக்க வேண்டிய சில
அத்யாவசிய சாதனங்களைப் பற்றி இங்கு சொல்கிறேன்.
முதலில் புற உபயோகப் பொருட்கள் பற்றியும் அதன் பின்
உள் உபயோக முறைகளைப் பற்றியும் ஒன்றன் பின் ஒன்றாக
பார்க்கலாம்.
1. அக்கு -பிரஷர் magnet mat & kit :
இது கடின வேலைக்குப் பிறகு உண்டாகக் கூடிய
சோர்வையும் களைப்பையும் நீக்கிப் புத்துணர்ச்சி
அளிக்கக் கூடியது.தினசரி பயன்படுத்தும் போது
நம் ஆரோக்கியத்தையும் பேணுகிறது.
விலை நம்ம ஊரில் வெறும்
நூறு ரூபாய்களுக்குக் கீழே தான். படம் தான் பாரின்.
இதன் படத்தையும் , காணோளியையும் பாருங்கள்.
2 . உடல் எடைக் கருவி :
இது எடை குறைப்பாளர்களுக்கு மட்டும் இன்றி
அனைவரும் எடையை கட்டுபாட்டில் வைத்திருக்க
உதவும் கருவி. அது மட்டும் அல்ல , இதன் போனஸ் உபயோகம்
வெளிநாடு செல்லும் போது நம் பயணப்பெட்டி
எடைக் கூட அறிந்து கொள்ளலாம்.
இதை வெளிநாடுகளில் பாத்ரூம் ஸ்கேல் என்கிறார்கள்.
3 . பேசியல் சோனா :
இந்த சிறிய சாதனம் வெறும் அழகுக் கருவி மட்டும் அல்ல
ஜலதோஷம் ஏற்படும்போது நாம் கஷ்டப்பட்டு வெந்நீர் வைத்து
பயந்து பயந்து செய்யும் ஸ்டீமிங் கிற்கு நல்ல எளிதான மாற்று வழி.
சில சொட்டுக்கள் யுகலிபடுஸ் என்னை சேர்த்து ஆவி பிடித்தால்
மூக்கடைப்பு ஜலதோஷம் விலகும். வீட்டிலேயே பேசியலும்
செய்து முக ஜொலிப்பைக் கூட்டலாம். மருந்தகங்களிலும்
பிரபல கடைகளிலும் கிடைக்கும்.
4 . rope exerciser : [ தொப்பைக் குறைக்கும் கருவி ]
இதை வீட்டு சன்னலில் மாட்டிப் பின் கால்களை
உயர்த்திப் பயிற்சி செய்து எளிதாக தொப்பை குறைக்கலாம்.
உடல் பருமனானவர்களுக்கு ஏற்றது. எளிதானது.
எங்கும் சென்றாலும் எளிதில் எடுத்து செல்லலாம் .
இடத்தை அடைக்காது.
5 . பிற பயனுள்ள கருவிகள் :
மாற்று மருத்துவ முறையாக நாம் சில வெள்ளை கிறிஸ்டல்கள் ,
குறைசக்தி காந்த பட்டைகள் , வீட்டிலேயே ரத்த அழுத்தம் அளக்கும் கருவி ,
சர்க்கரை அளக்கும் கருவி போன்றவை வைத்திருந்தால் மிகவும் நல்லது.
சிறிய அளவே வித்யாசங்கள் இருந்தாலும் நாம் ஒப்பிட்டு அடிக்கடி பார்ப்பதற்கு
வசதியாக இருக்கும். குறிப்பாக இதை அளக்கவென்று நாம் செல்லும்
மருத்துவமனை தூரமாக இருக்கும் போது.
http://www.healingmagnetscrystals.com/magnets.php
இதைப்
போன்ற கருவிகள் அனைத்தையும் நாம் எதாவது ஒரு உடற்பயிற்சி முறையுடன்
அதாவது யோகா , நடைப்பயிற்சி போன்றவற்றுடன் சேர்த்து செய்யும் போது கூடுதல்
பலன்கள் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment