Sunday, 8 April 2012

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்



உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்(Perform your actions with strategy
)


விவேகானந்தர்
நாம் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காரியத்தை எப்படி செய்கிறோம்? எவ்வளவு குறைந்த நேரத்தில், எவ்வளவு நேர்த்தியுடன் செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சரித்திரம் அடங்கியுள்ளது.

ஒரு காரியத்தை சும்மா கடமைக்காக செய்தால் மட்டும்போதாது. யுக்தியுடன் செயலாற்றும்போது தான் நமது திறமையும், உழைப்பும் உலகத்தாருக்கு பிரகாசிக்கும். "அவன் மாடாகத்தான் உழைக்கிறான். ஆனால் 'கூறு' தான் இல்லை" என அனைவரும் ஒருவரின் செயல்களைப் பற்றி அடிக்கடி கூறுவதைப் பார்க்கிறோம். இந்தக் 'கூறு' என்பதுதான் புத்தி.

'யுக்தி' என்றால் என்ன? அது அறிவின் முதிர்ச்சியே. அனுபவத்தின் சிகரமே யுக்தியாக (Cleverness) மாறுகிறது.

ஒருவன் பெரிய அறிவாளியாகவும், படிப்பாளியாகவும் இருப்பார். ஆனால் யுக்தியுடன் மட்டும் செயலாற்றவில்லை என்றால், பெரும்பயன் ஏதும் அந்தச் செயலின் மூலம் அடையமுடியாது.

ஒருவன் தேன ்சேகரிக்க வேண்டி காட்டிற்கு சென்றான். அவன் தேன் கூட்டைக் கண்டவுடனேயே தான் கொண்டு வந் தடியின் மூலம் நேரடியாகத் தேன் கூட்டை அடித்தான். அப்போது என்னவாயிற்று?

அவனக்கு தேன் துளியும் கிடைத்தது. ஆனால் தேனீக்களோ, அவன் உடம்பினை துளைத்துவிட்டன. அவன் தனக்குத்தேவைஆயன செயலைச் செய்து கொண்டாலும், அதன் மூலம் அவன் துன்பத்தைத் தான் தனக்கே வரவழைத்துக் கொண்டான்.

இன்னொருவனோ அதே காட்டிற்குச் சென்றான். தன்னை நன்றாக துணியால் மூடிக்கொண்டான். பின்பு லாவகமாக அந்த தேன்கூட்டினை அடித்தான். அதை கலைத்தான்.

உடனே தேனீக்களும் கோபத்துடன் அவளை தாக்க பறந்துத வந்தன. அவனும் லாவகமாக ஒதுங்கிக் கொண்டான். தன்னை நன்றாக போர்த்திக் கொண்ட தால், தேனீகளால் அவனைக் கொட்ட முடியவில்லை. அவனக்கு தேனும் அதிகமாக கிடைத்தது.

இருவரின் செயல்களையும் கவனியுங்கள். இருவருக்கும் செயல்களில் என்ன வித்தியாசம்! இரண்டாமவன் யுக்தியுடன் ('புத்திசாலித் தனத்துடன்) செயலாற்றியதால் அவன் தனது காரியத்தில் சுலபமாக வெற்றியடைய முடிந்தது. நாம் அனைவரும், முதல் மனிதன் செய்தது போன்று ஒரு செயலில் அவசரமாக இறங்குகிறோம். என்ன செய்யப்போகிறோம்? அதற்கு என்ன தேவை? என்பதுகூட நினைக்காமல், காரியத்தில் உடனே இறங்கிவிடுகிறோம். அதனால்தான் நமக்கு தேவையான பலன்களும் கிடைப்பதில்லை. வேதனைகள்தான் மிஞ்சுகின்றன.

எனவே, அனைவரும் யுக்தியுடன் செயலாற்றுங்கள். வெற்றிப் பெறுங்கள்.

No comments:

Post a Comment