Sunday, 8 April 2012

உடல் பருமனை குறைக்க சிறப்பான வழிமுறைகள்



இப்போதெல்லாம் உடல்பருமன் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

ஒரு வயது முதல் 90 வயது வரைக்கும் உள்ளவர்களையும் பாடாய் படுத்துவது இந்த உடல்பருமன் பிரச்னைதான்.

இயந்திர மயமாகிவிட்ட இச்சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டே வேலை
செய்பவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள் தான் இத்தகைய உடல் பருமனுக்கு பெரும்பாலும் ஆளாகிறார்கள். சில பரம்பரை காரணிகளாக இருப்பதுண்டு. குழந்தைள் கூட இந்த உடல்பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

முக்கியமான காரணங்கள்

1. அதிக கலோரி மதிப்புகளை உடைய உணவினை அதிக அளவில் உண்ணுதல்.
2. குறைந்த அளவில் உடற்பயிற்சி செய்வது
3. உடற்பயிற்சியே செய்யமலிருப்பது.


உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள்.

1. குறைந்த கலோரிகளை உண்ணுதல்

உடல் பருமனை குறைப்பதற்கு குறைந்த கலோரிகள் உள்ள உணவை உண்ண வேண்டும். கலோரிகளின் அளவைக் குறைக்கும்போது அடிப்போஸ் திசுக்களில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகளானது கரைந்து உடலுக்கு சக்தியைத் தருகின்றன. இந்த முறையில் கொழுப்பு கரைய கரைய உடலில் உள்ள தேவையற்ற தசைகள் அதாவது உடல் பருமனானது சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

2. உடற்பயிற்சி (Exercise)

சுமாரான அளவுள்ள உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்து வந்தால் கூட உடல் பருமன் குறைய வாய்ப்பிருக்கிறது.

அதாவது நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் அளவுக்கு தகுந்த வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது.

உதாரணமாக ஒரு நாள் 3 மைல் தூரம் நடக்கும்போது 300 கிலோ கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால் உடல் பருமன் குறைவதோடு, மேலும் பருமனாகமல் தடுக்க முடியும்.

3. உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் (Weight Maintenance Diets)

உடல் எடையைச் சமச்சீராக அதாவது இயல்பான நிலைக்கு வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களை சரியான அளவுகளுடன் உண்ணும்போது உடல்பருமன் என்றாலே என்னவென்றே தெரியாமல் போகும்.

தடுப்பு முறைகள்

உடல் பருமனை நாம் உண்ணும் உணவு முறைகளில் மூலம் தடுக்கலாம்.

1. அதிகக் கலோரிகளை உண்ணக்கூடாது.
2. அடிக்கடி உணவினை சாப்பிட்டுக் கொண்டே இருக்கக்கூடாது.
3. இடைவெளி விட்டு நேரத்திற்கு தகுந்தாற் போல் சரியாக உண்ண வேண்டும்.
4. நன்றாக பசி எடுத்த பின்னரே உண்ண வேண்டும். (இது ரொம்ப முக்கியம்)
5. ஏதோ கடமக்கு என்று சாப்பிடக் கூடாது.
6. வறுக்கப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
7. எண்ணெய்ப் பொருட்கள், கொட்டை வகைகள், இனிப்புப் பண்டங்களைத் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
8. முக்கியமாக கொழுப்புச் சத்துக்கள் கலந்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
9. தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
10. ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உண்ணப்படும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி குழந்தகளுக்கும், தாய்மார்களுக்கும் தெள்ளத் தெளிவாகக் கூறி புரியும்படி விளக்களாம்.

இத்தனையும் செய்து உடல் எடை குறையவில்லை எனில் நல்ல மருத்துவரை பார்த்து ஆலோசிப்பது நலம்.

No comments:

Post a Comment