உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள்
நாம் உலகில் எதையும் அனுபவிப்பதற்கும், எதையும் பார்த்து ரசிப்பதறகும், எந்தச் செயலையும் திறம்பட செய்வதற்கும் அடிப்படையானது நமது உடல்தான்.
'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்'
'உடம்பால் அழியின் உயிரார் அழிவர்' என்பது எல்லாம் மது உடல் ஆரோக்கியத்தின் மகத்துவம் பற்றி விளக்குவதாகும்.
நமது உடல் நமக்கு ஒத்துழைத்தால்தான் எந்தச் செயலையும் திறம்படச் செய்ய முடியும். இல்லையெனில் சோம்பலும் உடல் வேதனையும் எதையும் செய்ய விடாது.
நல்ல உடல் ஆரோக்கியமானது. நல்ல மனவளத்திற்கு காரணமாகிறது. நல்ல மனம்தான் இடமான நல்ல செயலைத திறம்பட செய்யத் தூண்டுகிறது.
உடம்பில் ஒரு சாதாரண தலைவலி என்று வந்தால கூட, அன்றைய பொழுதில் நமது காரியங்களை திறம்படச் செய்ய முடியாது என்பதை நாம் அனுபவத்தில் அறிந்துள்ளோம்.
விடியற்காலை(அதிகாலை) மலரக்கூடிய மலர்களைப் போன்று நீயும், புதியதாகவும்,உற்சாகத்துடனும், அன்றைய தினத்தின் கடமைகளைச் செய்ய தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் உனது வேலைகளைத் திறம்படவும், வேகமாகவும் செய்ய முடியும்.
நான் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற புத்துணர்வு நம் உடல் முழுவதும் பரவ வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக இரவு முழுவதும் கண்விழித்து, உடல்சக்தியெல்லாம் வீண்விரையமாக்கி விட்டு காலை 8 மணிக்கு கண்விழித்து, அவசர அவசரமாக தயாராகி ஆபீஸ் சென்றால், அன்றைய பொழுது முழுவதும் வீண்தானே.. அவன் எவ்வாறு தனது வேலைகளை விறுவிறுப்பாகவும், யுக்தியுடனும் ,திறமையுடனும் செய்ய முடியும்.
நன்றாகக் கவனிக்கப்பட்ட ஒரு சாதாரண ஜாதி குதிரையானது (ordinary Breed) குதிரையானது, ஒழுங்காகக் கவனிக்கப்படாத ஒரு உயர்ஜாதிக் குதிரையை ஓட்டப்பந்தயத்தில் மிக சுலபமாக ஜெயித்துவிடும்.
எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் உடலையும், மனத்தையும் பாதுகாத்து வரவேண்டும். தனது சக்திகளை வீண்விரையங்கள் செய்து விடக்கூடாது. கெட்ட பழக்க வழக்கங்களை தீயென நினைத்து ஒதுக்கிவிட வேண்டும். இளமைத் துடிப்பில் சாதனை படைக்க வேண்டிய இளைஞர்கள் புகை, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாக தங்களது வாழ்க்கைப் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னமேயே அதில் தோற்றுவிடுகிறார்கள்.
"தீயவை தீய பயத்தலால் அவை தீயினும் அஞ்சப்படும்"
என்று வள்ளுவர் வன்மையாக தீயப்பழக்க வழக்கங்களை கண்டிக்கிறார். மழைக் காலத்தில் ஆறுகள் தண்ணீர் நிரம்பி ஓடும்போதே வெள்ளத்தை திட்டமிட்டு சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆற்றில்நீர் வற்றிவிடும். பின்பு நாம் கஷ்டங்கள் பட வேண்டியதுதான். அதுபோலதான் நம்மிடம் இளமையும், நேரமிருகும் இருக்கும்போதே செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.
No comments:
Post a Comment