- வயதானவர்களின் அறிவு முதிர்ச்சி, நடுவயதுக்காரர்களின் மன உறுதி, இளைஞனின் உற்சாகம், குழந்தையின் இதயம் ஆகியவற்றை அளிக்கும்படி தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
- மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையுமே நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும்.
- கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கூடாது.
- தனி இடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனை மற்றும் அமைதியான சிந்தனையால் அறிவை நிரப்பி தியானம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும்.
- பாரதியார்.
பாரதியாரைப் பற்றி இன்றைய தகவல் பெட்டகம்.
பாரதியாரின் புகழை வட மாநிலங்களில் பரப்பும் வகையில், வாரணாசியில் அனுமன்காட் என்ற பகுதியில் பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அனுமன்காட்டில் உள்ள தமிழர்கள், பாரதியாருக்கு சிலை வைத்திருந்தால் அதில் ஆச்சரியங்கள் இல்லை.. ஆனால் உ.பி., மாநில இந்தி சன்ஸ்தான் என்ற இந்தி மொழிக்கான அமைப்பு, இந்தச் சிலையை நிறுவியுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். பாரதியார் 1898-ல் காசியில் உள்ள தன் அத்தையின் வீட்டுக்குச் சென்றார். பாரதியார் தேசியக்கவியாக மாற, காசி வாழ்க்கை முக்கிய காரணமாகும். பாரிதியார் காசியில் வாழ்ந்த அத்தை வீடு, தற்போது சிவமடம் என அழைக்கப்படுகிறது.
பாரதியாரின் உறவினர்கள் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். காமகோடிசுவரர் கோயில் அருகே இந்த வீடு உள்ளது. காசிக்கு செல்லும் தமிழர்கள், அனுமன்காட் பகுதியில் உள்ள பாரதியின் சிலையையும், அவர் வாழ்ந்த வீட்டையும் பற்றி அறிவதில்லை. இந்தப் பதிவின் இவற்றை அறிய தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். உங்களுக்குப் இப்பகிர்வு பிடித்திருந்தால் கருத்துரை அளிக்க மறக்காதீர்கள்..! நன்றி நண்பர்களே..!!
No comments:
Post a Comment