சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?
ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது
ஒரு சரியான செயல் அல்ல.
சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,
![madulai](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPz0s_8wZt97P1SniO-cuwms-Mu2Tm7CUliaWYo6mKLc1uawEHP-6-J3dk6L1SA-kjugkdp2aK8nbQ96NHMwPiB81OL8c5FBc_zcYg9x7zwOIuwEEBDIS_L93gwKriZVO_vgCube6pIQmL/s640/madulai.png) |
மாதுளை |
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும்
நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை
குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை
செய்கிறது.
![banana](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5OKFdxWBYocIV-cGJwcFePrg7xoeGUG6B4btumZbHnl7wx0tcqKYqUDo6gLw3NIDyg_N69rvFpVc1pT2_E-raY2ol1fIwuRYoEx7FlSre-qgkOBBPNSa2nzW4lqJZCeFWxGvfEGisVjVk/s640/banana.png) |
வாழைப் பழம் |
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப்
பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும்,
செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை
கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான்
சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய
பலன் அதிகம் நம்மை சேருகிறது.
![grapes](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVZiR549Sb6Sno1M8kTNJFc-zizNAJbH6btRHoZG_mSCYP9rPiVzEvmtwq88wRm781RnlpWH9KU-qtrIDLULS67OVVxAzvVDQcH8bJTCpgsJVT_n9SqNUTBz01E4yKd6uziwwPaGTRlfX0/s640/grapes.png) |
திராட்சை பழங்கள் |
அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம்
உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது
முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.
![guava](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9A8GdYCVQ7l7P4QwVeh4wOJwDpghptObrixuYihiuDZcCGLM_OAU8FqXJkXYmQuzWFUD7xWWCUdjtX9RJUjwBA8k90A7Lzed5hdCJl1U1U6QCgAgoWSl79d7RSF5vuVgXi9aBxflI33fV/s640/guava.png) |
கொய்யாப் பழங்கள் |
சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம்
எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட
ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.
![Orange Fruit](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjOr40LI9-d96jNLbMRvAsAsENCsBwHGfsuQ6QxCPfQ71_qkigOhMNzI3UtxqtajVuSJF6Xcx2_HA12SqNkbpZbR813jPRINZ1HO78f4SZmdAQgONadoEN7lgfzG6wDVj7O5sUkK56sJmW/s1600/orange_fruits.png) |
ஆரஞ்சு |
பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும்
காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள்
இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.
ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:
பதிவில்
குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும்
பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம்
உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை
கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய
கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.!
No comments:
Post a Comment