Sunday, 8 April 2012

கண்களைப் பாதுகாக்க ஆடாதொடா பூ...


கண்கள் கவனம்

கண்களைப் பாதுகாக்க ஆடாதொடா பூ...

பெரும்பாலும் நாம் கணினியின் முன் அமர்ந்து பணிபுரிபவர்களாக இருப்போம்.. இக்காலத்தில் கணினி இல்லை எனில் எதுவும் நடக்காது என்பதை போன்ற இந்நிலையில்  நாம் கணினியைத் தவிர்க்கவும் முடியாது.

கணினியில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல.. அனைவருக்கும் பயன்தரக்கூடிய, கண்களை பாதுகாக்க  இயற்கை மூலிகை ஒன்று உள்ளது..

அதன் பெயர் ஆடாதொடா பூ...



ஆடாதொடா இலை

இம்மூலிகை மிக அற்புதமான மருத்துவ குணம் கொண்டது.


இதை ஆயுர் வேத மருத்துவத்தில் வைத்திய மாதா என்றும் கூறுகின்றனர்.

இதற்கு வேறு பெயர்கள் கபக்கொல்லி, கப மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

கண்சம்பந்தமான அனைத்து நோய்களையும் இது குணப்படுத்துகிறது என்று ஆயர்வேத, சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆடாதொடை பூ - 150 கிராம்
பசு வெண்ணெய் - 150 கிராம்

(இரண்டும் சம அளவு இருக்க வேண்டும்)

இரண்டையும் சேர்த்து அரைத்து ஒரு மண் சட்டியில் வைத்து சிறு தீயாக எரித்து நீர் சுண்டியதும் கீழிறக்க வேண்டும். நன்றாக ஆறிய பிறகு எடுத்து வைத்துக் கொண்டு கண்களுக்கு மை இடுவது போல் இட்டு வந்தால் கண் நோய் குணமாகும். கண்ணுக்குள் படாமல் கவனமாக வைக்க வேண்டும். இதில் மிக அதிக கவனம் தேவை.

மற்றொரு முறை;

ஆடாதொடை பூ - 150 கிராம்
பசு நெய் - 150 கிராம்
சோற்றுக் கற்றாழை - 75 கிராம்

முதலில் ஆடாதொடைப் பூவையும் கற்றாழைச் சோற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பசு நெய்யில் கலந்து மண் சட்டியில் வைத்து நீர் சுண்டும் வரை மெல்ல எரித்து பிறகு கீழிறக்கி வைத்துக்கொள்ளவேண்டும். கண்களுக்கு மை இடுவது போல் இட்டு வந்தால் கண் நோய் குணமாகும். கண்ணுக்குள் படாமல் கவனமாக வைக்க வேண்டும். இதில் மிக அதிக கவனம் தேவை.

ஆடு தொடா இலை, கண்வலி, கண்களில் நீர் வடிதல், கண் கூச்சம், கண் உருத்தல், கண் எரிச்சல், கண் சிவத்தல், போன்றவைகளுக்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment