![]() |
Confident- girl |
1. இவர்கள் புதிய பொறுப்புகளை தாங்களாகவே வலிய வந்து ஏற்றுக்கொண்டு அவைகளை மிகவும் குறுகிய காலத்தில் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
2. இவர்கள் சீக்கிரமாக களைத்துவிடமாட்டார்கள். இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உற்சாத்துடன் பணிபுரிந்து நிறைய காரியங்களைச் செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள்.
![]() |
நம்பிக்கை |
3. இவர்கள் ஆர்வத்துடன் தினமும் பல புதிய விஷயங்களைக்
கற்றுக்கொண்டு தங்களுடைய அறிவையும், செயல் திறமையையும் வளர்த்துக்கொண்டு
வருவார்கள்.
4. இவர்கள் கட்டாயம் வெட்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.. மற்றவர்களுடைய கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டு கொஞ்சமும் தயக்கப்படாமல் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுவார்கள்.
5. தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகளையும், தங்களுடைய உரிமைகளையும் கெட்டவர்கள் அபகரித்து அனுபவிப்பதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.
![]() |
நம்பிக்கை மனிதர் |
6. இவர்கள் வெற்றி வீர்ர்களைப் போன்று தங்களுடைய தோற்றத்தை கம்பீரமாக வைத்திருப்பார்கள்.. இவர்கள் வெற்றியைப்பற்றியே எப்போதும் நினைத்துப் பேசி வருவார்கள். இவர் சௌகரியங்கள் நிறைந்த வளமான வாழ்க்கை நிச்சயமாக தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புபவர்களாக இருப்பார்கள்.
இவர்களுடைய முகங்களில் கவலையின் கோடுகளோ அல்லது பயத்தின் அறிகுறிகளோ சிறிதுகூட காண முடியாது. இவர்களுடைய இதழில் அனைத்து நேரமும் புன்சிரிப்பு நிலைத்திருப்பதை நாம் காண முடியும்..
![]() |
நம்பிக்கை பெண்மணி |
7. இவர்கள் தங்களை நோக்கி எதிர் வரும் பிரச்சினைகளை சவால்களாக ஏற்றுக்கொண்டு அவைகளுடன் உடனே நேரடியாக மோதி அவைகளை வெற்றிக்கொள்ளுவார்கள்.
No comments:
Post a Comment