Sunday, 8 April 2012

கண்நோய்களைத் தீர்க்கும் Omega-3..!!


எந்த நேரமும் கணினியின் முன்னாலே உட்கார்ந்துகொண்டு வேலை செய்பவர்களுக்கு இப்பதிவும் இன்னும் ஒரு நல்ல பயனுள்ள பதிவாக அமையும். விஷயத்துக்கு வந்துடறேன்.

'மீனைப் போன்ற கண்'என்று சொல்கிறோம். அது அழகான கண்ணை வர்ணிக்கும் வாக்கியம். ஆனா கண் நல்லா இருக்கணுமா? மீனைச் சாப்பிடுங்க.. ! இதையே தான் கொஞ்சம் கீழே விளக்கி எழுதியிருக்கேன். படிச்சுப் பாருங்க.

ஒமேகா என்றால் என்ன? 

ஒமேகா 3 என்பது ஒரு கொழுப்பு அமிலம். இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது.


இது நீண்ட கால நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டது.  இதனாலதான் அடிக்கடி மீன் சாப்பிட வேண்டும் என்று பாட்டி சொல்கிறார்களோ என்னவோ? என் பாட்டிக்கு சாகும் வரையிலும் கூட பார்வை 'பளிச்' தான் போங்க.

சின்ன வயசுல தெரியாம அடுக்குப் பானையில் இருக்கிற வெல்லக்கட்டியை எடுக்கபோனாலும் சரி, கடுகு டப்பாவில் இருக்கிற சில்லறை காசு எடுக்கப் (கடுக்காய் மிட்டாய் வாங்கறதுக்குத்தான்) போகும்போது சரி.. நிறைய தடவ நான் பாட்டியின் பார்வையிலிருந்து தப்பவே முடியாதுங்க. இதுக்கு தண்டணையா அப்பாகிட்ட வாங்கிகட்டிக்கிட்டது. முதுகு தோலு உரிஞ்சு போனது எல்லாம் வேற கதைங்க. 

புடைக்கும்போது அரிசியில் இருக்கும் செல் பூச்சிகளைக் கூட சரியாக எடுத்து வீசும் பார்வை திறன் அவருக்கு இருந்தது.  அவரின் பார்வை ரகசியம் இப்போதுதான் புரிகிறது.

சரி. பதிவுக்கு வந்துடுவோம்.

நமது கண்களில் உள்ள ரெட்டினா விழித்திரையில் மாக்யூலர் னு ஒன்று இருக்குங்க.  இந்த மாக்யூலர் டேமேஜ் ஆகிடுச்சுன்னா பார்வை குறைபாடு, பார்வை மங்குதல் ஏற்படும்.  இதை தவிர்க்கவே இந்த பதிவின் தலைப்பான ஒமேகா 3 பயன்படுதுங்க.


fish fry- fish food


இது மீனில் அதிகம் இருக்கிறதாலதான் மீன் சாப்பிடுங்க.. மீன் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க போல.

இது சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி கூட நம்ம ஆளுங்க செஞ்சிருக்காங்க..

 பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ். பாஸஃடன் பெண்கள் மருத்துவமனையிலுள்ளவங்க..

அப்புறம் ஹார்வர்டு மருத்து பள்ளி இங்க இருக்கிறவங்க இந்த ஆராய்ச்சிய செஞ்சி அறிக்கையாகவும் வெளியிட்டிருக்காங்களாம்.

இதனால நம்ம வூட்டம்மாக்களுக்கும் - வுமன்களுக்கு(பெண்களுக்கு) 38 பர்சன்ட் கண்கள் கண் நோயான மாக்யூலர் நோய் குறைந்திருக்காம்.

No comments:

Post a Comment