Sunday, 8 April 2012

ஆயிரக்கணக்கான Icon-களை அள்ளிச் செல்ல ஒரு அற்புதமான தளம்..!!


ஒவ்வொரு இணையதளமும் தங்கள் தளங்களுக்கேற்ற வகையில் இருக்கும் ICON - களை வடிவமைத்துப் பயன்படுத்துகின்றனர். தளத்திற்கு வரும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும், தளங்களைத் தனித்துக்காட்டவும் இப்படிப்பட்ட சிறு படங்கள் உதவுகின்றன. இத்தகைய Favicon அல்லது Icon உருவாக்கத் தெரியாதவர்களுக்கென்றே இணையத்தில் சில தளங்கள் இருக்கின்றன. உதாரணமாக சொல்லவேண்டுமெனில் நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் முன்னர் F என்ற குறியீட்டை ICON ஆக வைத்திருந்தோம்.

இதுபோன்று உங்கள் வலைத்தளம், Blogger Blogspot தளங்களுக்கும் இத்தகைய ICON - களை வைக்கலாம்.

இந்த ICON களை இலவசமாக கொடுப்பதற்கென பல தளங்கள் இருப்பினும் இத்தளம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. தளத்தின் பெயர்: ICON WANTED

free icons download
இத்தளத்தில் நீங்கள் பயனர் கணக்கை உருவாக்கிகொள்ளுங்கள்.
பிறகு வேண்டிய ICON களை Search Box மூலம் தேடிப் பெற்றுக்கொள்ளலாம்.
பல்வேறு வகைகளாக வகைப்படுத்தி (Categories)வைத்திருப்பதால் தேடுவது சுலபம்.
  • Search Icon Library
  • Operating Systems Icons
  • Standard Admin Icons
  • Standard Download Icons
  • Aqua Blend Icons
  • Creme Icons
  • Neige Icons
  • Blend Icons
  • Mac
  • Drifting PSP Icons
  • Fat Icons
free icons download
free icons download
  • Pleasant Icons
  • Simple Icons
  • Antares Icons
  • Perfect Fantasy Icons
  • Cute File Icons
  • Colorful Paint Icons
இவ்வாறான ஏராளமான தலைப்புகளில் நிறைய Icon -கள் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
download free icons
download free icons
ஒவ்வொரு வகைகளிலும்(Categories) எத்தனை Iconகள் உள்ளன என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். வேண்டுவோர் தளத்தில் இணைந்து பல பயனுள்ள ICON or Favicon பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் பிளாக்கில் ICON வைக்க 
Dashboard==>Design==>Page Elements சென்றால் அங்கு FAVICON என இருக்கும். அதிலுள்ள Edit என்பதைக் கிளிக் செய்து, Choose File என்பதை கிளிக் செய்வதன் மூலம்  நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் Favicon -ஐ தரவேற்றம் செய்துகொள்ளலாம். மேலும் உங்கள் வலைப்பூவில் பல்வேறு இடங்களிலும் இத்தகைய Icon - களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்பு: நீங்கள் தரவேற்றம் செய்யும் ICON ஆனது .ico என்ற விரிவுடன்(Extension) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment