இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.
enjoy life |
சாலையோரப் பிச்சைக்காரர்கள்(Beggars) கூட ஒரு அமைதியுடன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் சம்பாதிக்கும் நமக்கு அவசரம், அவசரம், மேலும் அவசரம்.!!
அன்றாடம் உடல் உழைப்பில் களைத்தோப்போய் தூங்கும் தொழிலாளர்கூட மாலையில் பிள்ளைகளுடன் காலத்தைக் கழிக்கிறான். இரவானால் அமைதியாய் படுத்து உறங்கிவிடுகிறான். குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறான். அந்த மகிழ்ச்சியில் உழைத்த களைப்புத் தெரியாமல் தன்னை மறக்கிறான்.
பணம்.. பணம்...பணம்.. எனும் மாய மானைத் துரத்திக்கொண்டு அன்றாடம் ஓடுகிறோம். வேலை.. வேலை.. வேலை.. என சிட்டாகப் பறக்கிறோம். எம்போன்ற மத்தியத் தர வர்க்கம்(Middle class) இதனால் எதையும் அடைய முடியாமல் ஒருவித இடைநிலையில், தண்ணீரில் மிதக்கும் சக்கைப் போன்றே மிதக்கிறோம். நீரின் அலைகள் ஆட்டுவித்தால் மேலும் கீழும் ஆடும் தக்கைப் போல நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
இதனால் குறுகிய காலத்திலேயே சலிப்பு வந்துவிடுகிறது. எதைச் செய்து என்ன பயன்? பலன் ஒன்று கிடைக்கவில்லையே என்ற விரக்தி வந்துவிடுகிறது. இதுவே தொடர்கதையாக ஆகிவிடுகிறது. அலுவல் சார்ந்த படப்படப்பு(Business-related palpitations), எல்லா நேரத்திலும் வந்துவிடுகிறது. என்றேனும் ஒரு நாள் ஏன் இந்த அவசரம்? என சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும் நாம் அனாவசியமாக படப்படப்பை, அவசரத்தை மேற்கொண்டிருக்கிறோம் என்று.
விலங்கினங்களைப் பாரப்போமானால் அவைகள் தனது தேவைகளைப் பெறும்போது கூட இந்த அவசரத்தைக் காட்டுவதில்லை. பறவைகளை(Birds), பட்டுப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள்(Sparrow), வண்ணத்துப்பூச்சிகளென கண்ணுக்குப் புலனாகும் இயற்கை அதிசயங்கள்(Natural Wonders) அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. தமக்கு வேண்டியதைப் பெற்றவுடன் அமைதியடைகின்றன. ஆனால் மனிதன்..??!!!
மனிதனாகிய நாம்தான் தேவைகளைப்பூர்த்தி செய்ய அவசரப்படுகிறோம். ஆதங்கப்படுகிறோம். அவைகள் நிறைவேறவில்லை என்றால் கோபப்படுகிறோம். நிம்மதியை இழந்து(Lost peace) தவித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் எத்தனையோ விபரீத விளைவுகளையும் சந்திக்கிறோம். என்றேனும் ஒரு நாள் இந்த அவசரம் எதற்கு? என்று அமர்ந்து அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நம்முடைய அவசரம் நமக்கேப் புரியும். நம்முடைய கோபம் நமக்கே நகைப்புக்குரியதாக இருக்கும். நம்முடைய ஆதங்கம் வெறுமையாகத் தோன்றும்.
No comments:
Post a Comment